உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

கிரிக்கெட் விளையாடும் போது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

தொண்டாமுத்தூர்:ஆறுமுககவுண்டனூரில், கிரிக்கெட் விளையாடி கொண்டிருக்கும்போது, மயங்கி விழுந்த நபர் உயிரிழந்தார்.குனியமுத்தூர், முத்துச்சாமி உடையார் வீதியை சேர்ந்தவர் செந்தில் குமார்,47; ஐ.டி., ஊழியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். செந்தில்குமார் வழக்கமாக வார விடுமுறையில், தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட சென்று விடுவார்.அதேபோல, வார விடுமுறை தினமான நேற்று, காலை உணவு உண்ணாமல், நண்பர்களுடன் ஆறுமுககவுண்டனூரில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட வந்துள்ளார். விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென செந்தில் குமார் மயக்கமடைந்து, கீழே விழுந்தார்.உடனடியாக, நண்பர்கள் செந்தில்குமாரை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர், வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பேரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை