உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

ரோட்டில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை;வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கபட்டது.வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை பரவலாக பெய்கிறது. காற்றுடன் மழை பெய்வதால், பல்வேறு இடங்களில் மண் சரிந்தும், மரம் விழுந்தும் பாதிப்பு ஏற்பட்டது.வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள புதுத்தோட்டம் அருகே, நேற்றுமுன்தினம் காலை, ரோட்டில் மரம் விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்புத்துறையினர், மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். இதனால், வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ