உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்டவிரோதமாக பதுக்கி மது விற்ற வாலிபர் கைது

சட்டவிரோதமாக பதுக்கி மது விற்ற வாலிபர் கைது

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, எஸ்.மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்து மது விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் கார்த்தி, 31. இவர் கிணத்துக்கடவு, எஸ்.மேட்டுப்பாளையம் பகுதியில் மது விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கார்த்தியிடம் விசாரணை செய்தனர். இதில், அவர் சட்டவிரோதமாக விற்பனைக்கு மது வைத்திருந்தது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து, 110 மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். தேர்தல் பிரசார நேரத்தில், மது வகைகளை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பது அதிகரித்துள்ளது. இதனால், போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்