உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ராம்நகர் ராமர் கோவிலில் ஆடி மாத உபன்யாசம்

ராம்நகர் ராமர் கோவிலில் ஆடி மாத உபன்யாசம்

கோவை;ராம்நகர் கோதண்ட ராமஸ்வாமி தேவஸ்தானத்தில், ஆடி மாத உபன்யாசம் வரும் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடக்கிறது.கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம் மற்றும் கோயம்புத்துார் திருப்பாவை சங்கம் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில், உயன்யாசம் நடத்தப்படுகிறது.இந்தாண்டுக்கான நிகழ்ச்சி, ராம்நகர் ராமர் கோவில் பிரவசன மண்டபத்தில், வரும் 25 முதல் 27 வரை தினமும் மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை நடக்கிறது. 'ஸ்ரீ கிருஷ் லீலைகள்' என்ற தலைப்பில், திருக்குடந்தை வெங்கடேஷ் சொற்பொழி வாற்றுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ