| ADDED : மார் 25, 2024 12:06 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில் நடந்த ஆண்டுவிழாவில், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரியில், ஆண்டுவிழா மற்றும் கலை இலக்கியப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.ஹயக்கிரீவா கல்வி நிறுவனங்களின் செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். முன்னதாக, ஆங்கிலத்துறைத்தலைவர் நிவேதா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக, மதுரை செந்தமிழ்க்கல்லுாரி துணை முதல்வர் ரேவதி சுப்புலட்சுமி கலந்து கொண்டார். தொடர்ந்து, 'மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். அதுவே வாழ்வில் உயர்ந்த இடத்திற்கு அழைத்துச்செல்லும். இதை மாணவர்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.தவிர, மாணவ, மாணவியரின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விழாவில், ஹயக்கிரீவா கல்வி நிறுவனங்களின் தலைவர் ரத்தினம், தாளாளர் மகேந்திரன், அறங்காவலர் ரவிக்குமார், முதல்வர் கண்ணன், கல்வியாண்டின் சிறந்த மாணவர் சபரிநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதில், கல்லுாரி மாணவ, மாணவியர், பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். கணிதவியல் துறைத் தலைவர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.