உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதினங்களிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!

ஆதினங்களிடம் ஆசி பெற்ற அண்ணாமலை!

கோவை;சிரவையாதினம் குமரகுருபர சுவாமிகள் மற்றும் பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரிடம், பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை ஆசி பெற்றார்.பா.ஜ.,சார்பில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும்அண்ணாமலை, சிரவை ஆதினத்திற்கு நேற்று சென்றார். மலர் மாலை மற்றும் பழங்களுடன் சென்ற அவர், குமரகுருபர சுவாமிகளிடம் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசி பெற்றார். திருநீற்றை நெற்றியில் வெற்றித்திலகமாக இட்ட குமரகுருபர சுவாமிகள், 'வெற்றியின் திருஉருவம் தமிழ் கடவுளான முருகப்பெருமானை நினைத்து, மனமுருகி வேண்டி கட்சிப்பணிகளை துவங்கினால், வெற்றி வந்து சேரும்' என்று, வாழ்த்தி அண்ணாமலையை வழியனுப்பி வைத்தார்.

பேரூராதினத்திடமும் ஆசி

பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரையும், அண்ணாமலை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், அண்ணாமலைக்கு சால்வை அணிவித்து, மலர் கிரீடம் சூட்டி ஆசி வழங்கினார். ஆதின மடத்தில் உள்ள நடராஜர் சன்னதி மற்றும் சாந்தலிங்க சுவாமி சன்னதியில் வழிபாடு நடத்தினார். அதன்பின், சிறிது நேரம், ஆதினத்துடன் கலந்துரையாடி புறப்பட்டு சென்றார்.அதன்பின் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறுகையில்,'' கோவையில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவே கூடாது. ஆனால், மாநில அரசின் மெத்தன போக்கால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின், ஜல் சக்தி திட்டத்தை முறையாக செயல்படுத்தாமல், தி.மு.க., அரசு முறைகேடு செய்துள்ளது. குஜராத்தில், மோடி முதல்வராக இருந்தபோது, 100 நாளில், 1 லட்சம் குளங்களை வெட்டி, 17 மீட்டர் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தினார்.அதை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு, நீர்நிலைகளை தூர்வார ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநில அரசு அதையும் முறையாக செயல்படுத்தவில்லை.உடனடியாக, கோவையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை