உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நீர்நிலையில் வண்டல் எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

நீர்நிலையில் வண்டல் எடுக்க இணையத்தில் விண்ணப்பிக்கலாம்

கோவை:நீர்நிலைகளில் களிமண் மற்றும் வண்டல் மண் எடுப்பதற்கு, அரசு இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: கோவை மாவட்டத்தில் உள்ள, 84 நீர் நிலைகளில் படிந்துள்ள களிமண் மற்றும் வண்டல் மண்ணை, மண்பாண்ட தொழில் விவசாய நில மேம்பாட்டு பணிகளுக்காக, இலவசமாக எடுத்துச் செல்ல கோவை மாவட்ட அரசிதழ் சிறப்பு வெளியீடாக, மூன்று முறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள நீர்நிலைகளிலிருந்து மண்பாண்ட தொழில், விவசாய பயன்பாட்டிற்குத் தேவையான களிமண், வண்டல் மண்ணை இலவசமாக எடுத்துச் செல்ல, மண்பாண்ட தொழிலாளர்கள் அல்லது விவசாயிகள், tnesevai.tn.gov.inஎன்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பம் செய்து பயனடையலாம்.இவ்வாறுல கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை