மேலும் செய்திகள்
உலக கழிப்பறை தின உறுதிமொழி ஏற்பு
12 minutes ago
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்
24 minutes ago
அதிகாரிகளின் அலட்சியத்தால் குட்டைகரையில் குவியுது குப்பை
42 minutes ago
ஓய்வூதியர்கள் நடத்திய மனித சங்கிலி போராட்டம்
50 minutes ago
பொள்ளாச்சி தி.மு.க., வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து, காங்., மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:பா.ஜ.,வினர் ஹிந்து எனக்கூறி வருகின்றனர்; நாங்க ஹிந்து இல்லையா. மகாத்மா காந்தி ராமபிரானின் பக்தர்; இறக்கும் போது கூட, ராமா ராமா எனக்கூறினார். ஹிந்து எனக்கூறி பிரிவினையை ஏன் உருவாக்க வேண்டும். தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளில், 80 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளார். தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.அதன்பின், நிருபர்களிடம் கூறுகையில், ''தகவல் அறியும் உரிமை சட்டத்தில், தகவல் கேட்டதும் அண்ணாமலைக்கு ஏழு நாளில் தகவல் கிடைக்கிறது. நாம் விண்ணப்பித்தால் ஒரு மாதமாகும். கடந்த, 50 ஆண்டுகளாக கச்சத்தீவு பிரச்னையை பேசிகிட்டு தான் இருக்கின்றனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டவர். அவரை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை,'' என்றார்.
12 minutes ago
24 minutes ago
42 minutes ago
50 minutes ago