உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓட்டு அளிப்பதன் அவசியம் மக்களிடம் விழிப்புணர்வு

ஓட்டு அளிப்பதன் அவசியம் மக்களிடம் விழிப்புணர்வு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியில், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.பொள்ளாச்சியில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் வகையில், பொதுமக்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.அதில், பொள்ளாச்சி நகர பகுதியில் பொது மக்கள் அதிகம் கூடும் இடமான கடை வீதி மற்றும் அரசு மருத்துவமனை அருகில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.அப்போது, 100 சதவீதம் ஓட்டுப்பதிவு, வாக்களிப்பது நம் அனைவரின் ஜனநாயக கடமை என வலியுறுத்தப்பட்டது. ஏப்., 19ம் தேதி தேர்தல் நாளில் ஓட்டு அளிப்பதன் கடமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பொள்ளாச்சி அருகே வால்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ரமணமுதலிபுதுார், சோமந்துறை சித்துார், பெத்தநாயக்கனுார் கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளின் முன்பாக, தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதியும், கோலமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ