கோவை:பீளமேட்டில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் சிறுவர் சிறுமியர் தங்களின் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தினர். சக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமியின் எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ - மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி, பீளமேடு மணி மகாலில் நடந்தது. மாணவர்களுக்கு பல்வேறு வயது பிரிவின் அடிப்படையில், குவாட், இன்லைன் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 35க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பங்கேற்றனர். வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள்: கிரிஷ், ராம், பூர்ணஜித், கீர்த்தனா, அதிதி, சுபேஷ், ஜெய்விசாகன், அத்யாந்தா, யாழிசை, கிரிஷ்விதா, ஜியோத்ஸ்னா, விகான், அகிலன், கிருஷ்ணன், சுவஸ்திகா, தரனிஸ், மேகா, ஹர்சில் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு சிக்சஸ் அபிநயா ஸ்கேட்டிங் அகாடமி செயலாளர் ரகுபதி, பயிற்சியாளர் அபிநயா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.