உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நொறுங்கின எலும்புகள்: ரெக்ஸ் சிகிச்சையில் நலம்

நொறுங்கின எலும்புகள்: ரெக்ஸ் சிகிச்சையில் நலம்

கோவை:கிருஷ்ணகிரியைச் சேர்ந்த, 65 வயது மூதாட்டி ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக வலது முழங்கால் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனைக்கு வந்த அவருக்கு, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், அவரது மூட்டைச் சுற்றி, நுாறுக்கும் மேற்பட்ட எலும்பு துண்டுகள் சிதறிக்கிடப்பது கண்டறியப்பட்டது. எம்.ஆர்.ஐ., மற்றும் சி.டி.,ஸ்கேனில், ஒரு வகையான கட்டியினால், அவருடைய முழங்கால் மூட்டில் உள்ள குருத்தெலும்புகள் அரித்து, சரளைக் கற்கள் போல உதிர்ந்து கொண்டிருந்தது கண்டறியப்பட்டது. மூதாட்டிக்கு, அதிநவீன நுாறு சதவீத ஆட்டோமேடிக் ரோபோடிக் சிஸ்டம் உதவியுடன், நுாற்றுக்கும் மேற்பட்ட உதிரியான எலும்புத் துகள்கள் அகற்றப்பட்டு, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.தற்போது வலியின்றி அன்றாட வேலைகளைச் செய்ய முடிவதாகவும், விரைவில் குணமானதை நம்ப முடியவில்லை என்றும் மூதாட்டி கூறினார்.மருத்துவமனை தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரெக்ஸ் கூறுகையில், '' ரெக்ஸ் மருத்துவமனையில், அனைத்து விதமான அதிநவீன தொழில் நுட்பங்களுடன், உயர்தர சிகிச்சை அளிக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி