உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெருநாய்களை கட்டுப்படுத்துங்க! பொதுமக்கள், விவசாயிகள் குமுறல்

தெருநாய்களை கட்டுப்படுத்துங்க! பொதுமக்கள், விவசாயிகள் குமுறல்

உடுமலை;உடுமலை நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி வருவதால், பொதுமக்கள் பாதிக்கின்றனர்.உடுமலை நகராட்சி மற்றும் கணக்கம்பாளையம், கண்ணமநாயக்கனுார், சின்னவீரம்பட்டி, குறிஞ்சேரி, பெரியகோட்டை ஊராட்சி பகுதிகளில், தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன.நகர பகுதிகளில் சுற்றும் தெருநாய்கள், குழந்தைகள், பெரியவர்களை கடிப்பதோடு, வாகனங்களில் செல்பவர்களை துரத்துவதால், வாகன விபத்துக்களும் ஏற்படுகிறது.அதே போல், கிராமப்பகுதிகளில், விவசாய நிலங்கள், தோட்டச்சாளைகளில், இரவு நேரங்களில் நாய்கள் புகுந்து, ஆடு, மாடு மற்றும் கோழிகளை கடித்து குதறுகின்றன.உடுமலை நகரம் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள இறைச்சி மற்றும் கோழிக்கடைகளில் வெளியேறும் கழிவுகள் பொது இடங்களில் கொட்டப்பட்டுவது, நாய்களுக்கு உணவாகவும், அவற்றின் பெருக்கத்திற்கும் காரணமாக உள்ளது.தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், என விவசாயிகள் தரப்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், ஒன்றிய அதிகாரிகள் தரப்பில், உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டும், ஊராட்சி நிர்வாகங்கள் கண்டு கொள்ளாததால், உடுமலை, மடத்துக் குளம் ஒன்றிய கிராமங்களில் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.உடுமலை நகர பகுதியில் தெரு நாய்களை கட்டுப்படுத்த, அவற்றுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டாலும், அவற்றில் நடக்கும் முறைகேடு மற்றும் நகருக்கு அருகிலுள்ள ஊராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்படாததால், தெருநாய்கள் பிரச்னைக்குதீர்வு காணப்படாத நிலையே உள்ளது.தெருநாய்களால், பொதுமக்கள், கால் நடைகள் பாதிப்பதை தடுக்க, ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என பொதுமக்கள், விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை