உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., கல்லுாரியில் 309 பேருக்கு பட்டம்

பி.எஸ்.ஜி., கல்லுாரியில் 309 பேருக்கு பட்டம்

கோவை;பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், 309 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.பீளமேடு பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், பட்டமளிப்பு விழா நடந்தது. பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.மைக்ரோசாப்ட் ரிசர்ச் இந்தியா நிறுவன துணைத் தலைவர் ஸ்ரீராம் ராஜாமணி, பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.ஐந்தாண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., மென்பொருள் அமைப்புகள், கோட்பாட்டு கணினி அறிவியல், தரவு அறிவியல், சைபர் பாதுகாப்பு, பேஷன் வடிவமைப்பு மற்றும் வணிகம் பட்டப்படிப்பும், 2 ஆண்டு எம்.எஸ்சி., அப்ளைடு கணிதம், மாஸ்டர் ஆப் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் மற்றும் பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ் மற்றும் வடிவமைப்பு, பயன்பாட்டு அறிவியல் பட்டப் படிப்பு முடித்த, 309 பேர் பட்டம் பெற்றனர்.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) சித்ரா, ஆலோசகர் பிரகாசம், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை