உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் விதிமீறல்: தட்டிக்கேட்ட பா.ஜ.,வினர் விரட்டியடிப்பு

தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் விதிமீறல்: தட்டிக்கேட்ட பா.ஜ.,வினர் விரட்டியடிப்பு

பல்லடம்;தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், தேர்தல் விதிமுறைகளை மீறி அராஜகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டிய பா.ஜ.,வினரை, பல்லடம் போலீசார் விரட்டியடித்தனர். கோவை லோக்சபா தொகுதிக்கு பல்லடம் சட்டசபை தொகுதி, அண்ணாநகர் ஓட்டு சாவடியில், தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் தேர்தல் விதிமுறை மீறுவதாக, பா.ஜ.,வினர் ஓட்டு சாவடியை முற்றுகையிட்டனர். முன்னதாக, எம்.எல்.ஏ., ஆனந்தன் மற்றும் கட்சியினர் கட்சி கொடியுடன் துண்டு அணிந்து வந்ததாக கூறி பா.ஜ.,வினர் தட்டி கேட்டனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. பா.ஜ.,வினர் கூறியதாவது:கட்சி சின்னம் பொறித்த பூத் சிலிப் வினியோகிக்கும் தி.மு.க.,வினர் ஓட்டு போட்டு வெளியே வந்ததும் அதனை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர். ஓட்டுச் சாவடிக்குள்ளேயே கட்சி சின்னம் பொறித்த பூத் சிலிப்கள் கொண்டு செல்லப்பட்டும் அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை. பல்வேறு ஓட்டுச் சாவடி களில் இதே நிலைதான் உள்ளது. இதேபோல் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மற்றும் கட்சியினர், கட்சி கொடி, துண்டுடன் ஓட்டு சாவடிக்கு வந்தனர். விதிமுறை மீறி வந்த அவர்களிடம் கேள்வி கேட்டதற்கு எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தொண்டர்களை தாக்க முயன்றனர். திராவிட கட்சிகளின் அராஜகத்தை தேர்தல் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். முன்னதாக, அண்ணா நகர் ஓட்டுச்சாவடியை முற்றுகையிட்ட பா.ஜ.,வினரை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். 'குற்றச்சாட்டுகள், புகார்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் கொடுங்கள். இதனை தவிர்த்து தேவையின்றி கூட்டம் சேர்க்க வேண்டாம்,' என, டி.எஸ்.பி., விஜிகுமார் கூறியதால், அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை