உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தி.மு.க., பிரமுகரின் கோழி கடைக்கு சீல்

தி.மு.க., பிரமுகரின் கோழி கடைக்கு சீல்

வால்பாறை: வால்பாறையில்,தி.மு.க., பிரமுகர், அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அமைத்திருந்த கடைக்கு, 'சீல்' வைக்கப்பட்டது.வால்பாறை காந்திசிலை அருகே, அரசுக்கு சொந்தமான இடத்தை தி.மு.க., பிரமுகர் கணேசன் ஆக்கிரமித்து, கோழிக்கடை நடத்தி வந்தார். இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை நகராட்சி அதிகாரிகள் கடையை காலி செய்யக்கோரி நோட்டீஸ் வழங்கினர். ஆனாலும் கடையை காலி செய்யாமல் தொடர்ந்து நடத்தி வந்தார். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் 'ரிப்போர்ட்டர் லீக்ஸ்' பகுதியில் கடந்த வாரம் செய்தி வெளியானது.இதனை தொடர்ந்து, நகராட்சி கமிஷனர் விநாயகம் உத்தரவின் பேரில்,தி.மு.க., பிரமுகரின் கடையை பூட்டி, அதிகாரிகள் 'சீல்'வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி