உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டம்

கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டம்

தொண்டாமுத்தூர்:கொல்கட்டாவில் பெண் டாக்டர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தொண்டாமுத்தூர் மற்றும் சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைகளில், டாக்டர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, ஒரு மணி நேரம் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது, உள்நோயாளிகள் பிரிவு மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தனர். 8:30 மணிக்குப் பின், டாக்டர்கள் கருப்பு 'பேட்ஜ்' அணிந்து, வழக்கம்போல தங்களது பணிகளில் ஈடுபட்டனர். இவ்விரு மருத்துவமனைகளிலும், நாள்தோறும் சராசரியாக 400 முதல் 500 பேர் புறநோயாளிகளாக வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை