| ADDED : மார் 29, 2024 12:24 AM
பாலக்காடு;கேரள மாநிலத்தில், மின் பயன்பாடு பெரும் அளவில் உயர்ந்துள்ளதாக, மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி தெரிவித்தார்.கேரள மாநிலம், பாலக்காட்டில் மின்சாரத் துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி நிருபர்களிடம் கூறியதாவது:மாநிலத்தில் மின் பயன்பாடு பெரும் அளவில் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் மின் பயன்பாடு 104.63 மில்லியன் யூனிட் ஆகும். இப்படி நாம் பயன்படுத்தியதே இல்லை. இதற்கு முன்பாக, 102.09 மில்லியன் யூனிட் வரை பயன்படுத்தப்பட்டுள்ளது.மின்சாரப் பயன்பாடு முடிந்தவரை கட்டுப்படுத்த, மின்சாரத்தை மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மின் பயன்பாடு குறைக்காவிட்டால் மாநிலம் கடும் பாதிப்புக்கு உள்ளாகும்.மாநிலத்தில் மின்தடை ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை தற்போது இல்லை. மின்சார பற்றாக்குறை இருந்தாலும் அதிக விலை கொடுத்து அதை வாங்குகிறோம். தற்போதைய சூழ்நிலையில் மின்தடை ஏற்படுத்தாமல் இருக்க முயற்சிக்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.