உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரும் 5 நாட்களுக்கு மழை எதிர்பார்க்கலாம்

வரும் 5 நாட்களுக்கு மழை எதிர்பார்க்கலாம்

பொள்ளாச்சி, : கோவை மாவட்டத்தில், வரும் ஐந்து நாட்களுக்கு, மழை எதிர்பார்க்கலாம் என, வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிக்கை வருமாறு:கடந்த வாரம் தமிழகத்தின் ஓரிரு இடங்களில், பரவலாக மழை பெய்தது. வரும் நாட்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும்.கோவை மாவட்டத்தை பொருத்தவரை அடுத்த ஐந்து நாட்களுக்கு, மழை அதிகபட்சம், 26 மி.மீ., வரை பெய்யும். வரும் வாரத்தில், அதிகபட்ச வெப்பநிலை, 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்ப நிலை 23 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.காலைநேர காற்றின் ஈரப்பதம் 90 சதவிகிதமாகவும், மாலைநேர காற்றின் ஈரப்பதம் 50 சதவிகிதமாகவும் பதிவாக வாய்ப்புள்ளது. சராசரியாக காற்று மணிக்கு 16-20 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை