உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட்: கோயம்புத்துார் ரைடர்ஸ் வெற்றி

ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட்: கோயம்புத்துார் ரைடர்ஸ் வெற்றி

கோவை : மாவட்ட அளவிலான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் கோயம்புத்துார் ரைடர்ஸ் கிரிக்கெட் கிளப் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி 'ஏ' மைதானத்தில் நடந்த 'காசா கிராண்ட்' கோப்பைக்கான ஐந்தாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில் கோயம்புத்துார் ரைடர்ஸ் கிரிக்கெட் கிளப் மற்றும் ஜி கிரிக்கெட் கிளப் அணி மோதின.முதலில் பேட்டிங் செய்த ஜி கிரிக்கெட் கிளப் அணி 45.4 ஓவர்களில் 97 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கோயம்புத்துார் ரைடர்ஸ் அணி சார்பில் ஜெபஸ்டின் வியாகா அமலன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் விளையாடிய கோயம்புத்துார் ரைடர்ஸ் அணியின் சரண் (47*) அசத்தலாக விளையாடி, அந்த அணி 22.2 ஓவர்களில் மூன்று விக்கெட் மட்டும் இழந்து 99 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி