உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்க தனித்திறமையை கண்டுபிடிங்க... அதுக்கேத்த படிப்பை செலக்ட் பண்ணுங்க

உங்க தனித்திறமையை கண்டுபிடிங்க... அதுக்கேத்த படிப்பை செலக்ட் பண்ணுங்க

''இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு, எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், பொறுமை இருப்பதில்லை. சாதிக்க வேண்டுமெனில், கடின உழைப்போடு பொறுமை அவசியம்,'' என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரவி பேசினார்.

இதுகுறித்து, அவர் பேசியதாவது:

நம் கல்விமுறை, மதிப்பெண்களோடு மிக தொடர்புடையது. வளர்ந்த நாடுகள், இம்முறையை பின்பற்றுவதில்லை. இந்தியாவில், 140 கோடி மக்கள் தொகையில், இளைஞர்களே அதிகம்.இவர்கள், உடல் ஆரோக்கியத்திற்கு, அதிக முக்கியத்துவம் தருகின்றனர். ஆனால், மனதளவில் வலிமை இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதனால், சிறிய தோல்வியை கூட, சந்திக்க முடியாமல் திணறுகின்றனர்.எல்லாமே எளிதில் கிடைத்துவிடுவதால், பொறுமை இருப்பதில்லை. சாதிக்க வேண்டுமெனில், கடின உழைப்போடு, பொறுமை அவசியம். இணையதளத்தில் எல்லா தகவல்களும், கிடைக்கின்றன. இதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். பள்ளியில் படிக்கும் போதே, போதை பழக்கத்திற்கு அடிமையானால், எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். உங்களிடம் இருக்கும் தனித்திறமையை கண்டுபிடியுங்கள். உங்கள் பலம், பலவீனத்தை அறிந்து, அதற்கேற்ற துறையை தேர்வு செய்து படியுங்கள். திறமையானவர்களுக்கு எல்லா துறைகளிலும், வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை மறக்க வேண்டாம். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை