உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு துவக்க விழா

முதலாமாண்டு துவக்க விழா

பொள்ளாச்சி;பூசாரிப்பட்டி, பொள்ளாச்சி கலை கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கான துவக்க விழா மற்றும் நோக்கு நிலைப்பயிலரங்கம் நடந்தது.கல்லுாரி செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். முன்னதாக, கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். கல்லுாரி தாளாளர் மகேந்திரன், வாழ்த்திப் பேசினார்.தமிழ்நாடு கல்லுாரி கல்வி சேவையின் முதல்வர் முரளிதரன் பேசுகையில், 'கல்வியை விட சிறந்தது உலகில் இல்லை; அக்கல்வியே அனைவரையும் உயர்த்தும்,'' என்றார்.தொடர்ந்து, பெற்றோர் முன்னிலையில் முதலாமாண்டு மாணவர்கள் தங்கள் கனவுகளையும் லட்சியங்களையும் பலுான்களில் எழுதி, உயர பறக்கவிட்டனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் துறைத்தலைவர் நந்தினி, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ