உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நிறுவனர் பிறந்த நாள் விழா 

நிறுவனர் பிறந்த நாள் விழா 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நல்ல முத்துக்கவுண்டர் மகாலிங்கம் கல்லுாரியில், நிறுவனர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. மாணவர் சிந்தனை மன்ற ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி வரவேற்றார்.கல்லுாரி முதல்வர்கள் முத்துக்குமரன், ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர், தொடர்ந்து, 'மறைந்த தொழிலதிபர் மகாலிங்கம், தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டவர். அவர், பன்முகத்தன்மை நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களை உருவாக்கி சமுதாய வளர்ச்சிக்கு பாடுபட்டார். அவரது கொள்கை களையும், கோட்பாடுகளையும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டது. கணிதவியல் துறைப் பேராசிரியர் சீனவாசன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மாணிக்கச்செழியன், மேலாளர் ரகுநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் பிரகலாதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ