உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்காவது டிவிஷன் கிரிக்கெட் சூரியபாலா அகாடமி வெற்றி

நான்காவது டிவிஷன் கிரிக்கெட் சூரியபாலா அகாடமி வெற்றி

கோவை;மாவட்ட அளவில் நடந்த நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், சூரியபாலா கிரிக்கெட் அகாடமி அணி வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'எல்.ஜி.எக்யூப்மென்ட் கோப்பை'க்கான நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி., ஐ.எம்.எஸ்.- ஏ மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் எக்கர் ஸ்போர்ட்ஸ் அணி மற்றும் சூரியபாலா கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த எக்கர் ஸ்போர்ட்ஸ் அணி, 48.1 ஓவர்களில், 126 ரன்களை சேர்த்தது. அடுத்து களம் இறங்கிய சூரியபாலா கிரிக்கெட் அகாடமி அணி, 45.2 ஓவர்களில், 8 விக்கெட் இழப்புகளுக்கு, 127 ரன்கள் எடுத்து வெற்றி அடைந்தது.இந்த அணியில் கதிர்வேலு பொறுப்பாக விளையாடி, 46 ரன்களை எடுத்தார். மாரிமுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதேபோல, எக்கர் ஸ்போர்ட்ஸ் அணியில் விஷ்ணு தேவ், 35 ரன்கனையும், அரவிந்தன், 3 விக்கெட்களையும் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை