| ADDED : ஆக 02, 2024 06:21 AM
கோவை : தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.34 லட்சம் மோசடி செய்த நபர்களை மாநகர சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.கோவை, சுங்கம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார்; தனியார் நிறுவன ஊழியர். இவரிடம் துடியலுார் அடுத்த அப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தனசேகரன்,29, ஆந்திர மாநிலம், ரேணிகுண்டாவை சேர்ந்த ரவி சந்துரு,58, ஆகியோர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆன்லைன் வாயிலாக அருண்குமாரை தொடர்புகொண்டனர்.மேலும், இதுதொடர்பான வீடியோக்களையும் அனுப்பியுள்ளனர். இதை நம்பி அருண்குமார் ரூ.34 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கான லாபத்தொகை வராததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வங்கிக்கணக்கு புத்தகங்கள், ஏ.டி.ஏம்., அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.