உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் தங்கம், வைரம் விற்பனை கண்காட்சி 

கோவையில் தங்கம், வைரம் விற்பனை கண்காட்சி 

கோவை;கோவையில் உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் சார்பில், இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது.ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தாஜ் விவாந்தா ஓட்டலில் நடந்து வரும் கண்காட்சியில் தங்கம், வைரம், விலை உயர்ந்த வைர கற்கள், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் தோடு, நெக்லஸ், வளையல், மூக்குத்தி மற்றும் திருமண நகைகள் என, ஏராளமான நகைகள் இடம் பெற்றுள்ளன.கண்காட்சி குறித்து, உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிர்வாக பங்குதாரர் அமரேந்திர உம்மிடி கூறுகையில், ''எங்களின் கலை நயம்மிக்க வடிவமைப்பு, நகைகளின் தரம் மற்றும் புதுமை, வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது. மிகவும் கவனம் செலுத்தி, ஒவ்வொரு நகையையும் நேர்த்தியாக வடிவமைத்துள்ளோம்,'' என்றார். காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும், கண்காட்சி இன்று நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை