உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள் அதிகரிப்பு

பறக்கும்படை, கண்காணிப்பு குழுக்கள் அதிகரிப்பு

சூலுார்;தமிழகத்தில் வரும், ஏப்., 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி, சூலுார் சட்டசபை தொகுதியில் முதல்கட்டமாக, மூன்று பறக்கும் படைகள், மூன்று கண்காணிப்பு படைகள் அமைக்கப்பட்டு, சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பறக்கும்படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. பறக்கும்படையின் எண்ணிக்கை, மூன்றில் இருந்து ஒன்பதாகவும், நிலையான கண்காணிப்பு குழுக்களின் எண்ணிக்கையும், மூன்றில் இருந்து, ஒன்பதாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இரு குழுவினரும் சுழற்சி முறையில், தொகுதியின் அனைத்து பகுதியிலும் வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை, 10 க்கும் மேற்பட்டவர்களிடம் ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த, 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சோதனை மற்றும் கண்காணிப்பு பணிகள் வேகமெடுக்கும், என, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை