உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்தோ - வளைகுடா சர்வதேச கருத்தரங்கு

இந்தோ - வளைகுடா சர்வதேச கருத்தரங்கு

கோவை:எஸ்.என்.எஸ்., மருந்தியல் கல்லுாரி மற்றும் மருந்தியல் வல்லுனர்கள் சங்கம் இணைந்து, 'மருந்து வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் மூலிகை மருந்து தொழில்நுட்பத்தில் உலகளாவிய சூழ்நிலை மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில், இந்தோ- வளைகுடா சர்வதேச கருத்தரங்கை நடத்தின.சிறப்பு விருந்தினர்கள் வளைகுடா, அஜ்மான் பல்கலையின் இணை ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் கவுரவ் குப்தா, சென்னை வேல்ஸ் பல்கலையின் மருந்தியல் துறையின் தலைவர் சண்முகசுந்தரம், தெலங்கானா நலந்தா மருந்தியல் கல்லுாரி பேராசிரியர் மற்றும் மருந்தியல் ஆய்வு பிரிவின் தலைவர் சின்னுபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.சிறந்த இ-போஸ்டர் பரிசை, பி.பி.ஜி., மருந்தியல் கல்லுாரியின் ஜீவிதா, ஈரோடு மருந்தியல் கல்லுாரியின் மூவேந்திரன், வெள்ளலார் மருந்தியல் கல்லுாரியின் சூரிய பிரபா, எஸ்.என்.எஸ்., மருந்தியல் கல்லுாரியின் நித்யா ஜீவா ஆண்ட்ரூ ஆகியோர் பெற்றனர்.சிறந்த மாணவருக்கான விருது திருநாவுக்கரசுக்கும், சிறந்த மாணவிக்கான விருது அஞ்ஜனாவுக்கும், சிறந்த திறமையாளர் விருது கோகுலுக்கும், சிறந்த செயல்திறனுக்கான விருது மணிகண்டனுக்கும், சிறந்த சாதனையாளர் விருது சந்தியாவுக்கும் வழங்கப்பட்டது. எஸ்.என்.எஸ்., நிறுவனங்களின் தலைவர் சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை