உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அன்னூர் ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

அன்னூர் ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரம்

கருமத்தம்பட்டி;வாகராயம்பாளையம் - அன்னூர் ரோட்டில் மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடக்கிறது. தென்னம்பாளையத்தில் இருந்து வாகராயம்பாளையம் வழியாக அன்னூர் செல்லும் ரோடு உள்ளது. பிரதான மாவட்ட சாலையான இந்த ரோட்டில், கரிச்சிபாளையம் அருகே கவுசிகா நதி செல்கிறது. கன மழை பெய்யும் போது, கவுசிகா நதி தரைப்பாலத்தில் மழை நீர் செல்வதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். அந்த இடத்தில் மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அந்த இடத்தில், மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டது. இதையடுத்து, அங்கு மேம்பாலம் கட்டும் பணிகள் துவக்கி தீவிரமாக நடந்து வருகிறது. தற்காலிகமாக வாகனங்கள் சென்று வர மாற்றுப்பாதை ஏற்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,' மழை காலங்களில் தண்ணீர் வந்தால் தரைப்பாலத்தை கடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது, மேம்பாலம் கட்டப்படுவதால், எளிதாக ரோட்டை கடந்து செல்லலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை