உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன சோதனை செய்த போலீசாருக்கு மிரட்டல்

வாகன சோதனை செய்த போலீசாருக்கு மிரட்டல்

கோவை:சாய்பாபாகாலனி போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். போலீஸ் எஸ்.எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, தலைமை காவலர் மணிமாறன், காவலர் பூபாலன் ஆகியோர் கோவில்மேடு, நான்கு ரோடு சந்திப்பில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனர்.அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜன்,31, கரூரை சேர்ந்த இளங்கோ,35, ஆகியோரை காவலர் பூபாலன் நிறுத்தினார்.அப்போது, இருவரும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பணியில் இருந்த பூபாலனை கீழே தள்ளிவிட்டு மிரட்டலும் விடுத்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை