உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 இரு சக்கர வாகனங்கள் திருடிய கரூர் நபர் கைது

12 இரு சக்கர வாகனங்கள் திருடிய கரூர் நபர் கைது

சூலுார்;சூலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 12 இருசக்கர வாகனங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.கோவை, ஒண்டிபுதூரை சேர்ந்த தனபால் என்பவரது பைக் நேற்று முன்தினம் திருடு போனது. சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், உடனடியாக பைக் திருடிய நபரை பின்தொடர்ந்து சென்று, காடாம்பாடி பகுதியில் பைக்குடன் பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கரூரை சேர்ந்த கவுதம்,34, என தெரிந்தது. ஊராட்சிகளில் குழாய் பதிக்கும் கான்ட்ராக்ட் பணி செய்து வந்தார். கரூரில் லாட்ஜ் நடத்துவதும் தெரிந்தது. திருடுவதை 'ஹாபி'யாக செய்து வந்துள்ளார். சூலுார், கோவை, பழநி உள்ளிட்ட பகுதிகளில் திருடிய, 12 பைக்குகளை, போலீசார் பறிமுதல் செய்து, கவுதமை கைது செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை