உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்

வால்பாறை;வால்பாறை ம.தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம், நகர செயலாளர் கல்யாணி தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு, கோவை தெற்கு மாவட்ட துணை செயலாளர் முருகன், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இளைஞரணி செயலாளர் திருஞானம் வரவேற்றார்.கூட்டத்தில், மதுரையில் நடந்த விபத்தில் பலியான கட்சி நிர்வாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின், 31ம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் தலைமை நிலைய செயலாளர் எம்.பி., துரையை வால்பாறைக்கு அழைத்து வந்து விழா நடத்த வேண்டும்.வால்பாறையை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல, பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவை மாவட்ட ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத்தலைவர் செல்வக்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை