உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வித்துறை அமைச்சர் வருகை சர்வீஸ் ரோட்டில் குழாய் சீரமைப்பு

கல்வித்துறை அமைச்சர் வருகை சர்வீஸ் ரோட்டில் குழாய் சீரமைப்பு

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவுக்கு இன்று, பள்ளி கல்வித்துறை அமைச்சர் வருவதால், சர்வீஸ் ரோட்டில் உள்ள, குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டது.கிணத்துக்கடவில், சிங்கராம்பாளையம் பிரிவு முதல் அரசம்பாளையம் பிரிவு வரை சர்வீஸ் ரோடு உள்ளது. இவ்வழியில் ஆழியாறு கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டுள்ளது. குழாயில் கசிவு ஏற்பட்டு அதிக அளவு குடிநீர் வெளியேறி வந்தது.இந்நிலையில், நேற்று சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டு, பொக்லைன் இயந்திரம் வாயிலாக குழி தோண்டி தண்ணீர் கசிவு சரி செய்யப்பட்டது. இதனால், நீண்ட நேரமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. மற்ற வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தில் திருப்பி விடப்பட்டன.இதனால், பஸ் ஸ்டாண்டில் நின்றிருந்த பயணியர் பாதிக்கப்பட்டனர். சிலர் ஆட்டோ வாயிலாக அரசம்பாளையம் பிரிவு வரை சென்று பஸ் பயணத்தை தொடர்ந்தனர். சிலர் அரசு டவுன் பஸ்சில் சென்று, கோவை பஸ்க்கு மாறினர்.மக்கள் கூறியதாவது:நீண்ட நாட்களாக குடிநீர் கசிவு பிரச்னை இருந்தது. இதனால், வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். பல முறை வலியுறுத்தியும் சீரமைப்பு பணி மேற்கொள்ளவில்லை. தற்போது, கிணத்துக்கடவு பள்ளிக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வருகிறார் என்பதால், குழாய் உடைப்பு மற்றும் ரோடு சீரமைக்கப்பட்டுள்ளது.அமைச்சர் வரும் போது மட்டும் துரிதமாக செயல்படும் அதிகாரிகள், மக்கள் குரலுக்கு செவி சாய்த்தால், அரசுக்கு தானே நல்ல பெயர் கிடைக்கும் என்பதை ஆளுங்கட்சியினரும், அதிகாரிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை