உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நான்கு மோட்டார் பழுதானதால் 35 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை: நாயக்கன்பாளையம் ஊராட்சியில் நீடிக்கும் அவலம்

நான்கு மோட்டார் பழுதானதால் 35 நாட்களாக குடிநீர் சப்ளை இல்லை: நாயக்கன்பாளையம் ஊராட்சியில் நீடிக்கும் அவலம்

பெ.நா.பாளையம்;நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 35 நாட்களாகியும் பில்லூர் குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில், 8 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கே நாள் ஒன்றுக்கு, 4 லட்சம் லிட்டர் பில்லூர் குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும். ஆனால், அதைவிட குறைவான அளவில் தண்ணீர் வருகிறது. பில்லூரில் இருந்து வரும் குடிநீர் நாயக்கன்பாளையம் வி.ஏ.ஓ., அலுவலகத்தின் பின்புறம் உள்ள தரைமட்ட தொட்டியில் சேகரிக்கப்பட்டு, அங்கிருந்து தலா மூன்று,10 ஹெச்.பி., ஒரு, 15 ஹெச்.பி., பூஸ்டர் மோட்டார்களால் தண்ணீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு உந்தி சப்ளை செய்யப்பட்டு, அங்கிருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேற்கண்ட, 4 மோட்டார்களும் பழுதடைந்து விட்டன. கடந்த, 35 நாட்களாக சரி செய்யப்படாததால், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பில்லூர் குடிநீர் வினியோகம் இல்லை.இது குறித்து, பில்லூர் குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை.இது பற்றி, நாயக்கன்பாளையம் ஊராட்சி துணைத்தலைவர் சின்னராஜ், முன்னாள் உறுப்பினர் ராஜசேகர் ஆகியோர் கூறுகையில், ' பில்லூர் குடிநீர் சப்ளை இல்லாததால், இங்கு வசிக்கும் பொதுமக்கள், மளிகை கடைகளில் விற்கும் கேன் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் அவலம் நீடிக்கிறது. போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்ய குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது, 35 நாட்களாகியும், பில்லூர் குடிநீர் விநியோகம் இல்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால், பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது தவிர வேறு வழியில்லை' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி