உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வேளாண் துறை அறிவிப்பு

மானிய விலையில் விதைகள், இடுபொருட்கள் வேளாண் துறை அறிவிப்பு

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் இடுபொருள்கள், 50 சதவீத மானிய விலையில் வழங்க அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.நடப்பு கோடை பருவம் மற்றும் சித்திரை பட்டத்திற்கு தேவையான நுண்ணூட்டக் கலவைகள், சூடோமோனாஸ் திரவ உயிர் உரங்கள், பயிறு வகை நிலக்கடலை மற்றும் சிறுதானிய விதைகளை மானிய விலையில், அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்படுகிறது. தற்போது தட்டைப்பயிறு, உளுந்து ஆகிய விதைகள் இருப்பில் உள்ளன. இவை மானிய விலையில் வழங்கப்படும். மேலும், 12.5 டன் மக்கிய தொழு உரங்களுடன், 2.5 கிலோ சூடோமோனாஸ் டிரைகோர்மா விரிடியினை நன்கு கலந்து, கடைசி உழவில் இடுவதால், பயிர்களை தாக்கும் அழுகல், தண்டு அழுகல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்தலாம். விதைப்பதற்கு முன்பு, விதைகளை அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிர் உரங்களுடன், ஆறிய அரிசி கஞ்சியினை கலந்து விதை நேர்த்தி செய்து, 30 நிமிடம் கழித்து, பின்னர் விதைக்கலாம். இடுபொருள்களின் இருப்பு நிலையினை உழவர் செயலியின் வாயிலாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் என, பெரியநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை அலுவலர் கோமதி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால் ஆகியோர் விவசாயிகளை கேட்டு கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை