உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நுாலகர் தினம் கொண்டாட்டம்

நுாலகர் தினம் கொண்டாட்டம்

பொள்ளாச்சி;இந்திய நுாலகத்தின் தந்தை என அழைக்கப்படும் ரங்கநாதனின், பிறந்த நாளான ஆக., 12ம் தேதி, தேசிய நுாலகர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.இந்நிலையில், பொள்ளாச்சி சக்தி தகவல் மேலாண்மை கல்லுாரியில், தேசிய நுாலகர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லுாரி இயக்குனர் சர்மிளா தலைமை வகித்தார். மகாலிங்கம் பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி நுாலகர் பாலமுருகன் கலந்து கொண்டு, 'நவீன சமுதாயத்தில் நுாலகங்களின் பங்கு' என்ற தலைப்பில் நுாலகங்களைப் பயன்படுத்தும் முறை, செயல்பாடுகள் குறித்து பேசினார். முடிவில், கல்லுாரி நுாலகர் கவிதா, நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை