| ADDED : ஜூலை 09, 2024 11:22 PM
கோவை;ரிசார்ட்டில் தங்குவதற்கு அனுமதி மறுத்ததால், உறுப்பினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. கோவை, வேடப்பட்டியை சேர்ந்த மகேந்திரன் என்பவர், - சென்னை துரைப்பாக்கத்திலுள்ள ஸ்டெர்லிங் ரிசார்ட் என்ற சொகுசு விடுதியில், அவ்வப்போது தங்குவதற்கு உறுப்பினர் கட்டணம், 23,000 ரூபாய் செலுத்தினார். இந்நிலையில், குடும்பத்துடன் துபாய் சென்ற அவர், மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தார். ரிசார்ட்டிற்கு சென்ற போது அனுமதி மறுத்துவிட்டனர். பராமரிப்பு கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அறை ஒதுக்கவில்லை. அவரிடம் கேட்காமல், உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்தனர்.இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள், 'ரிசார்ட் நிறுவனம் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரர் ஏற்கனவே செலுத்திய உறுப்பினர் கட்டணம் 23,000 ரூபாயை திருப்பி செலுத்த வேண்டும். மன உளைச்சலுக்கு இழப்பீடு மற்றும் செலவுத்தொகை சேர்த்து, 55,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.