மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
1 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
1 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
1 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
1 hour(s) ago
பொள்ளாச்சி;'கலைஞர் கனவு இல்ல திட்டத்தில், ஒன்றிய அதிகாரிகள், பொறியாளர்கள், ஊராட்சி தலைவர்கள் முடிவு எடுக்கும் நபரை, பயனாளியாக அறிவிக்க வேண்டும்,' என, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர், சப் - கலெக்டரின் நேர்முக உதவியாளர் அரசகுமாரிடம் மனு கொடுத்தனர். மனுவில் கூறியிருப்பதாவது:'கலைஞர் கனவு இல்லம்' பயனாளிகள் தேர்வு முறையில் ஓலை வீட்டில் குடியிருக்க கூடிய பயனாளிகள் மட்டும் தேர்வு செய்யப்படுவர் என்ற அறிவிப்பு நமது பகுதிக்கு பொருந்தாது. ஓலை குடிசை வீடு கட்டுவதை விட, பழைய சிமென்ட் சீட் வீடு கட்டுவது இரு மடங்கு குறைந்த செலவாகும்.ஓலை வீடு கட்டுவதை விட, விலை மதிப்பே இல்லாத பழைய ஓடுகளை கொண்ட மேற்கூரை அமைத்து சுற்றுச்சுவருக்கு பதிலாக பழைய சிமென்ட் சீட்டுகளை அமைத்து வீடு கட்டினால், ஓலை வீட்டை விட ஒரு மடங்கு குறைந்த செலவேயாகும்.மேற்குறிப்பிட்ட வீடுகள் கூட கட்ட முடியாமல் இடத்தை காலி இடமாக விட்டு, அருகாமையில் உள்ள விவசாயிகளின் மாட்டு கொட்டகைகளில், ஓர் பகுதியில் குடியிருப்பவர்களும் உள்ளனர். இதனால், 99 சதவீதம் ஓலை குடிசை வீட்டில் குடியிருப்பதற்கான வாய்ப்பு இல்லை.கடந்த, 1993ம் ஆண்டு அரசால் கட்டப்பட்டுள்ள பழைய 'ஏ' டைப் கான்கிரீட் வீடுகள் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளன. அவர்களை, கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்ய வேண்டும்.இதை தவிர, ஏற்கனவே கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகளில் அரசு கொடுக்கும் தொகையை விட, நான்கு லட்சம் ரூபாய் சொந்தமாக செலவிட்டால் மட்டுமே அரசு கொடுக்கும் வீட்டை கட்டி முடிக்க முடியும்.எனவே, பயனாளிகளை தேர்வு செய்யும் முறையில் தகுதி வாய்ந்த பயனாளிகள் யார், கட்ட தயார் நிலையில் உள்ளவர்கள் என, ஊராட்சி தலைவர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் ஆகியோர் கூடி முடிவு எடுக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் முடிவு எடுக்கும் நபரை பயனாளியாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago