உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்

ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் பாட்டில்

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோதவாடி --- கோடங்கிபாளையம் ரோட்டோரத்தில் பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில் வீசப்படுவதால் வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுகின்றனர்.கிணத்துக்கடவு, கோதவாடியில் இருந்து கோடங்கிபாளையம் செல்லும் ரோட்டின் இருபுறமும், விவசாய நிலங்கள் அதிகம் உள்ளன. இரவு நேரத்தில், இந்த ரோட்டின் ஓரத்தில் அமர்ந்து சிலர் மது அருந்திவிட்டு, காலி மதுபாட்டிலை உடைத்து வீசுகின்றனர்.மேலும், காலி தண்ணீர் பாட்டிலை விளைச்சல் நிலத்தில் வீசுகின்றனர். மரத்தில் காலி பாட்டிலை கட்டி தொங்க விட்டு செல்கின்றனர். இதனால், இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்கள் இந்த ரோட்டில் பயணிக்க அச்சப்படுகின்றனர். எனவே, ரோட்டில் அமர்ந்து மது குடித்து காலி பாட்டிலை வீசி செல்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ