உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்

துாக்கிட்டு வாலிபர் தற்கொலை

ஆனைமலையை சேர்ந்த ஹரிஹரசுதன்,24; சென்டரிங் பணி செய்து வந்தார். இவர் கடந்த, ஆறு ஆண்டுகளாக குடிப்பழக்கம் உள்ளதாகவும், போதைக்கு அடிமையானதாகவும் தெரிகிறது. கடந்த, 15ம் தேதி காலை வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஹரிஹர சுதனுக்கு அவரது நண்பர்கள் போன் செய்த போது, அவர் எடுக்கவில்லை.இதையடுத்து, வீட்டுக்கு சென்று நண்பர்கள் பார்த்த போது, ஹரிஹரசுதன் துாக்கில் தொங்கியவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்றுமுன்தினம் அவர் இறந்தார். இதுகுறித்து, ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விவசாயிகளிடம் கள் பறிமுதல்

ஆனைமலை அருகே வாழைக்கொம்பு பகுதியில் போலீசார் ரோந்து சென்ற போது, கள் விற்பனைக்காக வைத்து இருந்த அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை,56, என்பவரை போலீசார் கைது செய்து, ஏழு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.இதுபோன்று வேட்டைக்காரன்புதுார் தோட்டத்தில் கள் விற்பனைக்காக வைத்து இருந்த ஆறு லிட்டர் கள்ளை பறிமுதல் செய்து, அதே பகுதியை சேர்ந்த விவசாயி பாலசுப்ரமணியன்,54, என்பவரை கைது செய்தனர்.விவசாயிகள் கூறுகையில், 'ஆனைமலை சுற்றுப்பகுதியில், தேங்காய்க்கு விலை இல்லாத நிலையில், விவசாயிகள் சிலர் கள் இறக்கு விற்பனை செய்கின்றனர். தற்போது, போலீசார் கள் இறக்கும் விவசாயிகளை கைது செய்வது கண்டிக்கத்தக்கது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை