உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புத்தக வாசிப்பால் நேர்மறை எண்ணம் நிறைய வளரும்

புத்தக வாசிப்பால் நேர்மறை எண்ணம் நிறைய வளரும்

கோவை:சைபர் குற்றங்கள், போதைப்பொருள் இல்லாத கோவை எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஸ்ரீ சக்தி இன்ஜி., தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்தது.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில், ''போதைப்பொருட்களால் மாணவர்கள் அதிக பிரச்னைகளை சந்திக்கின்றனர். சமூக ஊடக தொடர்புகள் வாயிலாக மாணவர்கள் தாங்களே அறியாமல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். விளையாட்டு, நல்ல புத்தகங்களைப் படிப்பது, இசை கேட்பது, ஆக்கபூர்வமான பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது போன்ற நேர்மறையான பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது மனம், உடல்நலத்தை மேம்படுத்தும். மாணவர்களின் பிரச்னைகளை தீர்க்க 'போலீஸ் அக்கா' மற்றும் 'போலீஸ் பிரதர்' ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,'' என்றார்.ஸ்ரீ சக்தி நிறுவனங்களின் தலைவர் தங்கவேலு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை