உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தனியார் பால் நிறுவன சூப்பர்வைசர் தற்கொலை

தனியார் பால் நிறுவன சூப்பர்வைசர் தற்கொலை

ஆனைமலை:ஆனைமலை அருகே, தனியார் பால் நிறுவன சூப்பர்வைசர் தற்கொலை குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். ஆனைமலை அருகேயுள்ள, வேட்டைக்காரன்புதுாரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன்,25. இவர், தனியார் பால் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவரது, தந்தை கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக ஆனைமலையில் உள்ள தனியார் லாட்ஜில் ரூம் வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தவர், நேற்று முன்தினம் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை