உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நோயாளிகளுக்கு சத்துப்பொருள் வழங்கல்

நோயாளிகளுக்கு சத்துப்பொருள் வழங்கல்

பொள்ளாச்சி : எய்ட்ஸ் பாதித்த நோயாளிகளுக்கு, பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள கூட்டு மருந்து சிகிச்சை (ஏ.ஆர்.டி.,) மையம் வாயிலாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.இங்கு, எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, 1,100 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.அதேபோல, எய்ட்ஸ் பாதித்தோர் மாதம்தோறும் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று, எச்.ஐ.வி., பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக்குவதற்கான சத்துப்பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா தலைமை வகித்தார். ஏர்.ஆர்.டி., ஆலோசகர் விவேகானந்தன், 'ஆல் தி சில்ரன் டிரஸ்ட்' சம்பத்குமார், 'சந்திப்போம் பாசிட்டிவ் வெல்பர் சொசைட்டி' செயலாளர் சுமதி, காச நோய் பிரிவு பணியாளர்கள் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை