உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜெர்மன் டெக்னாலஜியில் மழை நீர் சேகரிப்பு செம்மொழி பூங்கா வளாகத்துக்குள் அமைகிறது

ஜெர்மன் டெக்னாலஜியில் மழை நீர் சேகரிப்பு செம்மொழி பூங்கா வளாகத்துக்குள் அமைகிறது

கோவை;கோவையில் அமைக்கப்பட்டு வரும் செம்மொழி பூங்கா வளாகத்தில், செயற்கை நீரூற்றுகள் மற்றும் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த, டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி.கோவை, காந்திபுரம் மத்திய சிறைச்சாலை மைதானத்தில், 45 ஏக்கரில் ரூ.172 கோடியில் செம்மொழிப் பூங்கா அமைக்கும் பணி, மாநகராட்சியால் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக, மூன்று 'பேக்கேஜ்'களாக பிரிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டது.இதில், 450 கார்கள் நிறுத்துவதற்கு ரூ.39 கோடியில் 'மல்டி லெவல் கார் பார்க்கிங்' ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இப்பணி தற்போது கைவிடப்பட்டுள்ளது.அதற்கு பதிலாக, இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்துக்கு, அருகாமையிலேயே கார்கள் நிறுத்தவும் வசதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான நிதியை பயன்படுத்தி, ஜெர்மன் தொழில்நுட்பத்தில், செம்மொழி பூங்கா வளாகம் முழுவதும், 2 கி.மீ., சுற்றுக்கு மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு, செயற்கை நீரூற்றுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கலையரங்கத்துக்கு இருக்கை வசதி ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கி, திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'செம்மொழி பூங்கா பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. உக்கடம் கழிவு நீர் பண்ணையில் இருந்து, சுத்திகரித்த நீரை தருவிக்க குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. விடுபட்ட பணிகளை மேற்கொள்ளவும், கூடுதலாக நீரூற்று, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தவும், மூன்றாவது பேக்கேஜில் திருத்திய நிர்வாக அனுமதி பெறப்பட்டது. அதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை