உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கவுசிகா நதி தடுப்பணையில் சீரமைப்பு பணி

கவுசிகா நதி தடுப்பணையில் சீரமைப்பு பணி

கோவில்பாளையம்:கவுசிகா நதி தடுப்பணையில், நேற்று சீரமைப்பு பணி நடந்தது.மேற்கே பெரியநாயக்கன்பாளையம் அருகே துவங்கி பெரியநாயக்கன்பாளையம், எஸ்.எஸ். குளம், அன்னூர், சூலூர் ஒன்றியங்கள் வழியாக கவுசிகா நதி செல்கிறது. இதில் கொண்டையம் பாளையம் ஊராட்சி, வையம்பாளையத்தில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் கடந்த ஆறு மாதங்களாக தன்னார்வலர்கள், கவுசிகா நீர் கரங்கள் ஒத்துழைப்போடு சீரமைப்பு பணி செய்து வருகின்றனர். தடுப்பணைக்கு மழை நீர் வரும் பாதையில் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. தடுப்பணையிலிருந்து அடுத்து மழை நீர் செல்லும் பாதையை சீரமைக்கும் பணியையும் துவக்கி செய்து வருகின்றனர். நேற்று பாலாஜி நகர் மற்றும் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம் அருகே சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். மரக்கன்றுகள் நடுதல், ஏற்கனவே உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றன.இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்,' தொடர்ந்து தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்போடு மழை நீர் செல்லும் பாதையை சீரமைத்து, வருடம் முழுவதும் தடுப்பணையில் மழைநீர் தேங்கும்படி செய்ய உள்ளோம்.கரைகளை உயர்த்தி, பறவைகளுக்கும் இடம் ஒதுக்க உள்ளோம். மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் பணி செய்து வருகிறோம்.இப்பணியில் பங்கேற்க விரும்புவோர் 99447 46179 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ