உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தேர்தல் விதிமுறையை தளர்த்துங்க!

தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண தேர்தல் விதிமுறையை தளர்த்துங்க!

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, சொக்கனுாரில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தேர்தல் விதிமுறையை தளர்த்த வேண்டும், என, ஊராட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.கிணத்துக்கடவு, சொக்கனுார் ஊராட்சியில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில், 11 தண்ணீர் தொட்டிகள் உள்ளது. மற்றும் 13 போர்வெல்கள் உள்ளன. இதில், சொக்கனுாருக்கு மட்டும் குடிநீர் வழங்கப்படுகிறது. மீதம் உள்ள பகுதிகளுக்கு, போர்வெல் தண்ணீர் வழங்கப்படுகிறது.கோடை காலத்தில், போர்வெல்லில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. மேலும், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் ஒரு சில தினங்களில் வறட்சி நிலவ அதிக வாய்ப்புள்ளது. தற்போது இந்த நிலையை சரி செய்ய தண்ணீர் குறைவாக உள்ள ஊராட்சிகளில் போர்வெல் அமைக்க ஒன்றிய அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.ஆனால், தேர்தல் விதிமுறை அமலில் இருக்கும் போது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத சூழ்நிலை இருப்பதால், ஊராட்சிகளில் புதிதாக போர்வெல் அமைக்க முடியவில்லை. எனவே, பொதுமக்களின் அடிப்படை தேவையான தண்ணீரை சீராக வழங்க, தேர்தல் விதியை தளர்த்த வேண்டும்.பிரச்னை தீராவிட்டால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட தயாராக உள்ளார்கள். எனவே, இதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஊராட்சி தலைவர் திருநாவுக்கரசு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !