உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி விளையாட்டு விழா

சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி விளையாட்டு விழா

கோவை : மேட்டுப்பாளையம், ஸ்ரீ சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளியில், 24வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக தேசிய விளையாட்டு வீராங்கனையும், ஆரோக்கியப் பயிற்சியாளருமான ஜெயவீணா ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டு விழாவை துவக்கி வைத்தார்.உடற்பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் அன்றாட நிகழ்வுகளைக் குறிப்பேட்டில் எழுதும் பழக்கத்தின் தேவை குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. கலைநிகழ்வுகளையும் மாணவர்கள் அரங்கேற்றினர்.திரைப்பட நடிகர் தலைவாசல் விஜய், பள்ளியின் தாளாளர் மணிமேகலை, செயலர் மோகன்தாஸ், முதல்வர் ஜான் ஹாரிசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை