உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணி வெற்றி

இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணி வெற்றி

கோவை: மாவட்ட அளவில் நடந்த இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணி வெற்றி பெற்றது.கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'யூனிவர்சல் ஹீட் எக்சேஞ்சர்ஸ் கோப்பை'க்கான இரண்டாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி, ஸ்ரீ சக்தி கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில், சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எம்.சி.சி., மற்றும் ஸ்ரீ சக்தி கல்லுாரி அண்டு டி அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் அணி, 45.5 ஓவர்களில், 160 ரன்களை சேர்த்தது. இந்த அணியில் அதிகபட்சமாக சங்கர், 55 ரன் எடுத்திருந்தார்.அடுத்து களம் இறங்கிய ஸ்ரீ சக்தி கல்லுாரி இ அண்டு டி அணி, 39.5 ஓவர்களில், 127 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. இந்த அணியில் மணிமுருகன், 45 ரன்களை எடுத்திருந்தார்.அதேபோல முகேஷ், 4 விக்கெட்டுகளையும், கார்த்திகேயன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் எம்.சி.சி., அணியில், நவீன் ராஜ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி