உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஈஸ்வர் கல்லுாரியில் விளையாட்டு தின விழா

ஈஸ்வர் கல்லுாரியில் விளையாட்டு தின விழா

கோவை;ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரியின் விளையாட்டு தின விழாவை முன்னிட்டு, மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் கல்லுாரியின் 15வது ஆண்டு விழா கல்லுாரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. சர்வதேச மும்முறை தாண்டுதல் வீரர் முகமது சலாவுதீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.விளையாட்டு தினத்தை முன்னிட்டு, சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, தடகளம் மற்றும் பல்வேறு குழு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 110 புள்ளிகளுடன் சிவப்பு நிற அணி ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பை வென்றது. 90 புள்ளிகளுடன் நீலம் அணி இரண்டாமிடத்தை பிடித்தது. கல்லுாரியின் சிறந்த விளையாட்டு வீரராக, கூடைப்பந்து வீரர் விஜய் மற்றும் சிறந்த வீராங்கனையாக கூடைப்பந்து வீராங்கனை ஹரிதர்ஷினி தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் கோப்பை மற்றும் பரிசு வழங்கினார். ஈஸ்வர் கல்லுாரியின் தலைவர் மோகன்ராம், இயக்குனர் ராஜாராம், முதல்வர் சுதா, உடற்கல்வி இயக்குனர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை