உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.வி.எம்., ரத்தினம் பள்ளிகள் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி

எஸ்.எஸ்.வி.எம்., ரத்தினம் பள்ளிகள் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள யு.ஐ.டி., கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டு கால்பந்து போட்டியில், எஸ்.எஸ்.வி.எம்., ரத்தினம் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.இதில், மாணவர்களுக்கான வாலிபால், கால்பந்து, மாணவியருக்கான வாலிபால் போட்டிகள் நடந்து வருகின்றன. கால்பந்து போட்டிகள் 'நாக்அவுட்' முறையிலும், வாலிபால் போட்டி 'லீக்' முறையிலும் நடக்கிறது.மாணவர்களுக்கான வாலிபால் போட்டியில், கிரசன்ட் பள்ளியை அகர்வால் பள்ளி, 2--1 என்ற நேர்செட் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில், ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி அணியினர், பயனீர் மில்ஸ் பள்ளி அணியினரை, 2--1 என்ற செட் கணக்கில் வென்றனர். கால்பந்து முதல் போட்டியில், ரத்தினம் பள்ளி அணி, பயனீர் மேல்நிலைப்பள்ளி அணியை, 5- - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி அணி, இமாக்குலேட் பள்ளி அணியை, 5--3 என்ற கோல் கணக்கில் வென்றது. போட்டிகளை, யுனைடெட் கல்வி நிறுவனத்தின் தாளாளர் சண்முகம், கோவை மாவட்ட உடற்கல்வித்துறை ஆய்வாளர் குமரேசன், வி.சி.வி., மேல்நிலைப்பள்ளியின் மூத்த உடற்கல்வி இயக்குனர் சுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை