கோவை;மாநில அளவிலான குத்துவரிசை போட்டியில், கோவை கற்பகம் பல்கலையை சேர்ந்த மாணவர்கள் 12 பதக்கங்கள் வென்றனர். தமிழ்நாடு குத்து வரிசை சங்கம், திருப்பூர் மாவட்ட குத்து வரிசை சங்கம் சார்பில் நான்காவது மாநில குத்து வரிசை போட்டி, உடுமலையில் நடந்தது. மினி சப் - ஜூனியர், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என நான்கு பிரிவுகளில் பல்வேறு எடைப்பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர். இப்போட்டியில், கோவை சார்பில் கற்பகம் பல்கலை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர், சீனியர் பிரிவில் பங்கேற்றனர். திறமையாக செயல்பட்ட மாணவர்கள், 11 தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என 12 பதக்கங்கள் வென்று அசத்தினர். வெற்றி பெற்றவர்கள்
மும்மூர்த்தி, மதன் பாபு, கவுதமகிருஷ்ணன், தசாதரன், விஜய சந்தோஷ், முத்துப்பாண்டி, சசிதரன், பிரசிலா ஏஞ்சல், ராஜம், மரிய ரீட்டா, ரமணி ஆகியோர் தங்கப்பதக்கமும், கவின் சங்கர் வெள்ளிப்பதக்கமும் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, பல்கலை துணைவேந்தர் வெங்கடாஜலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் ஆகியோர் பாராட்டினர்.